“ஈ.பி.எஸ்-க்கு அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாது” – விளாசி தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி!


அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இது தொடா்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.

Also Read  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் சிக்கும் தமிழக அரசு!

முதலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read  திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கின்றனவென எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தீர்கள்.‌

அது பொய்யா? மின் பராமரிப்பு பணிகளுக்காக 19.06.2021 முதல் 28.06.2021 வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2,28,000 ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000.

Also Read  இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மழைக்கு வாய்ப்பு : இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

sathya suganthi

“பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி திமுக” – முதல்வர் பழனிசாமி சாடல்!

Shanmugapriya

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

ஓபிஎஸ் மகனை கரெக்ட் செய்த இபிஎஸ்! சசிகலா பிராஜக்ட் தோல்வியடையுமா?

Lekha Shree

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பூங்கோதை பரபரப்பு அறிக்கை

Tamil Mint

மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

Lekha Shree

சமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..

VIGNESH PERUMAL

RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

mani maran

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? சலசலப்பு ஏற்பட்ட நிலையில் மூத்த அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ். திடீர் ஆலோசனை!

Tamil Mint

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

பந்துவீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ், அதானி பெயர்! நாம் இருவர், நமக்கு இருவர் என கலாய்த்த ராகுல்!

Jaya Thilagan

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj