தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்


தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முந்தைய கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த மின் திட்டங்களை வேகப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டிருக்கின்றன என்றும் சில இடங்களில் மிகப்பெரிய பணிகள் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.

மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்றும் தமிழகத்தில் மின் தடை இனி இருக்காது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

தமிழக அரசின் மீது குறிப்பாக மின் துறை மீது பூதக்கண்ணாடி அணிந்து, குற்றச்சாட்டு சொல்லலாம் என, சமூக வலைதளங்களில் பொதுவாக குற்றம் சொல்கின்றனர் என விமர்சித்த அவர், எந்த இடங்களில் மின் தடை என குறிப்பிட்டு சொல்வதில்லை என்றும் குறிப்பிட்டு இடத்தை சொன்னால் மின் துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

மின்தடை குறித்து காஞ்சிபுரத்தில் எங்கோ, யாரோ பதிவிட்டதை, சென்னையில் உள்ள ஒருவர் மீண்டும் பதிவிட்டு தன் இருப்பைக் காட்டிக்கொள்ள நினைக்கின்றார் என கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரிசெய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக விளக்கினார்.

Also Read  நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

கொரோனா அதிகமாக இருந்தபோது வீடு, வீடாக மின் கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் அதற்கு பதிலாக மூன்று வாய்ப்புகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

மின்வாரிய பணியாளர்கள் கணக்கெடுக்க செல்லும்போது ஒருவர் அல்லது இருவர் செய்யக்கூடிய தவறுகளால் அதிகப்படியான கட்டண புகார்கள் வருகின்றன என்றும். இந்த புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் தவறு நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை... காரணம் என்ன....?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

sathya suganthi

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? : அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் .

Tamil Mint

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

Lekha Shree

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

ஹேலோ நாங்க சைபர் கிரைம் போலீசார் பேசுறோம் “ஆபாச வீடியோ பாத்தியா”: மாணவனை மிரட்டி பணம் பறித்த நபர்கள் கைது.

mani maran

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

Tamil Mint

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை

Tamil Mint