a

மின் கட்டணம் செலுத்த 3 வித சலுகைகள் – அமைச்சர் செந்தில்பாலாஜி


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் 2-வது கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள்தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Also Read  சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி கொள்ளலாம் என்றும் இதை 85 பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீதி உள்ள 10 முதல் 15 சதவீதம் பேர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இதற்கு தீர்வாக மே மாதத்திற்கு முந்தைய மாதமான ஏப்ரல் மாத மின் கட்டணத்தை செலுத்தலாம் அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  நாளை கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 வாய்ப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்கள் எதை விரும்புகிறார்களோ? அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறினார்.

குறிப்பாக டெபாசிட் எனப்படும் கூடுதல் வைப்பு தொகையும் பொதுமக்களிடம் வாங்கக்கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read  ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Tamil Mint

உலகளவில் கொரோனா பாதிப்பு 2.86 கோடியாக உயர்வு

Tamil Mint

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint

அரசு மருத்துவமனைகளில் 3 வேலையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

sathya suganthi

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (ஜனவரி 3) தொடங்கியது

Tamil Mint

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

“எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தில் உடன்பாடு இல்லை!” – கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

Lekha Shree

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint