ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல்: முதலிடம் பிடித்து மிதாலி ராஜ் சாதனை!


ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள் நிறைவடைந்துவிட்டன. டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Also Read  தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

இந்நிலையில், தொடரை இழந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைந்துள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

இந்த தொடர் தொடங்கும்போது புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த மிதாலிராஜ், முதல் போட்டியில் முடிந்த பிறகு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டதால் 762 புள்ளிகளுடன் ஐசிசி பெண்கள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். சுமார் 22 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும், 38 வயதான மிதாலி ராஜ், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். 8 முறை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மிதாலி ராஜ், இளம் வீராங்கனைகளை எல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டு, 16 ஆண்டுகளுக்கு பிறகும், தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Also Read  விவசாயிகளின் நகை கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளின் நகை கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Lekha Shree

சிவகாசியில் சட்டவிரோத செயல்கள் அமோகம்… திடீர் அதிரடி சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்….

VIGNESH PERUMAL

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

இன்றைய ஐ.பி. எல் தொடரில் டெல்லி அணி வென்றது

Tamil Mint

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

VIGNESH PERUMAL

“அயன் ” படத்தை போன்று நூதன முறையில் திருட்டு… சுங்கத்துறையின் அதிரடி கைது….

VIGNESH PERUMAL

தனுஷின் ரீல் நண்பருக்கு அடித்தது ஜாக்பாட்… யோகிபாபுவிற்கு டஃப் கொடுத்த புது ஹீரோ ரெடி…!

malar

‘வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை”… சூர்யாவின் ட்வீட்டால் திரையுலகினர் அதிர்ச்சி…!

Tamil Mint

ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் – கமல்ஹாசன்.

Tamil Mint

உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Tamil Mint

பொதுஇடத்தில் அசிங்கம் செய்தவர்… சம்பவ இடத்திலேயே பலி… இந்த கொலைக்கு காரணம் யார்….?

VIGNESH PERUMAL

விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் அவருக்கு ஜோடி மிஸ் இந்தியாவாம்……

VIGNESH PERUMAL