a

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்


சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை இல்லங்களில் இருந்து ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் வீட்டுக்குள்ளேயே கொண்டாடி மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்து திமுகவினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு நோ சொன்ன உச்சநீதிமன்றம்

வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து பதைபதைத்துப் போகிறேன் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  சாலையை சேதப்படுத்தி பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்!

திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் தன்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு திமுகவினர் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Tamil Mint

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Devaraj

எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை – முதலமைச்சர்

Tamil Mint

இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி

Tamil Mint

சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

Tamil Mint