“சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை நிறைவேறும்” – முதலமைச்சர் ஸ்டாலின்


நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது 2வது மகன் தனுஷ் (19).

இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவராகும் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், 2 முறையும் தேர்ச்சி பெறவில்லை.

Also Read  தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

அதனால் 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். இவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத நுழைவு சீட்டு வந்துள்ளது.

இந்நிலயில், நேற்று தனது நண்பர்களிடம் தான் 3வது முறையும் தேர்வில் தோல்வியடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடும் என விரக்தியாக பேசியுள்ளார்.

அதையடுத்து இரவு முழுவதும் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கியுள்ளனர்.

அப்போது தனுஷின் தாயார் சிவஜோதி காலையில் எழுந்து பார்க்கும்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Also Read  தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள்.

தகவல் அறிந்து வந்த கருமலைகூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இன்று தமிழகத்தில் இளங்கலை மருத்துவத்துக்கான நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தனுஷின் தற்கொலை சம்பவம் கூழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், பலரும் சமூக வலைத்தளங்களில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, “நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

Also Read  தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், தத்துவம் பேசும் ஓபிஎஸ்

Tamil Mint

ஏழை மக்களுக்கு உதவ நிக்கிகல்ராணி புதிய முயற்சி!

Shanmugapriya

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

சென்னையில் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

Lekha Shree

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!

sathya suganthi

ஜெயலலிதா இல்லத்தை விட பிரமாண்டமான் பங்களாவை போயஸ் தோட்டத்தில் கட்டும் சசிகலா

Tamil Mint

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

நிபா வைரஸ்: தமிழகத்தில் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Lekha Shree

நாம் தமிழர் கட்சிக்கு 10 சீட்: அதிமுக பேரம்?

Bhuvaneshwari Velmurugan