a

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!


லட்சத்தீவை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுங்கள் என இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.

லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் கோடா படேலை உடனடியான மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கேரள மக்கள், எழுத்தாளர்கள் மற்றும் கேரள நடிகர்கள் என பலர் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றும் பிரஃபுல் படேல் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைக்க தொடங்கினர்.

Also Read  இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் - இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக!

கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள் SaveLakshadweep என்ற ஹேஸ்டேக் உடன் லட்சத்தீவிற்கான தங்களின் ஆதரவு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பு வரை லட்சத்தீவு நிர்வாகியாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர் கொண்டு வந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் மக்களைப் பெரிதும் கவலை அடையச் செய்திருக்கிறது.

Also Read  இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

தொடக்கத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தினார். கொரோனா பரிசோதனையின் போது நெகட்டிவ் என்று வந்தால் 48 மணி நேரத்திற்குள் லட்சத்தீவிற்குள் மக்கள் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால், கொரோனா பாதிப்பே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் தற்போது 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி இங்கு கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. ஆனால் தற்போது குண்டர் சட்டத்தை இங்கு அமல் படுத்தியுள்ளார் புதிய நிர்வாகி.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் - நெஞ்சு வலியால் பலி

அரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கியுள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை மட்டும் பொறுப்பில் வைத்துக் கொண்டுள்ளது.

முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறியை தடை செய்துள்ளது அங்குள்ள முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவில் மட்டும் மது பானங்களுக்கு தடை நிலவி வந்தது. ஆனால் தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்திருக்கிறது அந்த அரசு.

சமீபத்தில் செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது கூட பிரச்சினையை கேட்காமல் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டது.

இப்படி பல பிரச்சனைகள் லட்சத்தீவில் தொடர்வதை அடுத்து அங்குள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசும், நரேந்திர மோடியும் செயல்படுகிறார்கள் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது லட்சத்தீவு நிர்வாகியை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரும் கமல்ஹாசனும் மத்திய அரசி வலியுறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமர் கோயில் நிதி சேகரிப்பா? அல்லது தேர்தல் பிரச்சாரமா? பாஜகவின் புதிய யுக்தி!

Tamil Mint

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

Jaya Thilagan

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்

Tamil Mint

சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி

Tamil Mint

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல்

Tamil Mint

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint