a

முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?


முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலைய வளாகத்தில் ரூபாய் 250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் ரூபாய் 70 கோடி செலவில் அமைக்கப்படும்.

கலைமாமணி விருதை போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் மூன்று எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது, பாராட்டுப் பத்திரம், ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

Also Read  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் நெல்சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் ஏற்படுத்தப்படும். இதில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளுக்கு மட்டும் ரூபாய் 24.3 கோடி ஒதுக்கப்படும்.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி - அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை நடைமுறையில் உள்ளது போல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.

ஊரடங்கு காலம் விளக்கிக்கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read  மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..

Ramya Tamil

புதுச்சேரி ஆளுநர் ஆகிறாரா இல கணேசன்? மத்திய அமைச்சரவைக்கு போகிறாரா கிரண்பேடி?

Tamil Mint

சாட்டை துரைமுருகன் கைது – சீமான் கண்டனம்!

Lekha Shree

கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

Tamil Mint

முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint