தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தாக்கல்..!


தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், “நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் தனுஷ் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

Also Read  திருடியதை திருப்பி கொடுத்த திருடன்… திருச்சியில் நடந்த ருசிகர சம்பவம்…!

ஆனால், இதை எதிர்க்கும் விதத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்? இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற அதிமுக அரசு அனைத்து சட்டப்போராட்டங்களையும் நடத்தியது” என கூறினார்.

ஆனால், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அதிமுகவுக்கு இல்லை.

Also Read  இனிமே ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது... புது திட்டம் ரெடி... அரசியல்வாதிகள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்...

நுழைவுத்தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு. தொடக்கத்திலிருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை பேரவையில் முன்மொழிகிறேன்” என கூறி நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

“நீட் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு திரும்பினர்.

Also Read  வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் - தமிழக அரசு!

நீட் விலக்கு கோரும் மசோதாவில் உள்ள அம்சங்கள் என்ன?

நீட் நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கையில் தெளிவாகிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய பொருளாதார வலுப்பெற்ற வகுப்பினருக்கு ஆதரவாக நீட்தேர்வு இருக்கிறது.

நீட் தேர்வு மூலம் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகள் தந்துள்ளன. சமூக நீதியை உறுதிசெய்யவும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

நீட்தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்று பரிந்துரைப்பது போலியானது; கல்வியின் தரம் என்பது மாணவர் சேர்க்கையின் மூலம் பேணப்படுவதில்லை” என நீட் தேர்வு விலக்கு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதலியை மணந்த அதிமுக எம்எல்ஏ

Tamil Mint

பாலியல் புகாருக்கு ஆதாரம் கேட்ட அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்? நடந்தது என்ன?

Lekha Shree

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது

Tamil Mint

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

என்னது ஓ.பி.எஸ் முதலமைச்சரா? செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை!

Bhuvaneshwari Velmurugan

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு

Tamil Mint

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Tamil Mint

பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளால் நிறைந்துள்ள ஆழ்கடல்? நீச்சல் வீரர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint