“குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்!” – முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..!


கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “ற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என ட்வீட் செய்துள்ளார்.

கோவை ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read  "வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி!" - கார் சர்வீஸ் சென்டர் நூதன விழிப்புணர்வு!

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, மிதுன் சக்கரவர்த்தி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மாணவியின் உறவினர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பேசியவர்கள், “மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாணவியை மிரட்டி அந்த குற்றத்தை மூடிமறைத்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும்.

அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்குவோம்” என தெரிவித்தனர்.

Also Read  "அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையீடு ஏன்?" - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விளக்கம்!

இந்த போராட்டத்தின் எதிரொலியாக தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த எல்லாரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பல அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது.

பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” என ட்வீட் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் – திருமாவளவன் அதிரடி பேட்டி

suma lekha

கனமழை: அணையை திறக்க முதல்வர் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலை; கரூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

ஆன்லைன் வகுப்பில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

sathya suganthi

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

பொது இடங்களில் ஆவி பிடிக்காதீங்க! கொரோனா வேகமாக பரவும் அபாயம்! மா.சு. எச்சரிக்கை

sathya suganthi