மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!


மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 10 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி 27 புதிய அமைச்சர்களை சேர்க்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2வது முறையாக கடந்த 2019ல் பதவியேற்றது.

பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதாலும், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோர் காலமாகி விட்டதாலும் 12 அமைச்சர் இடங்கள் காலியாக உள்ளன.

ஒரே அமைச்சர்கள் சிலர் இரண்டு துறைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இதனால், அமைச்சரவையை மாற்றம் செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.

Also Read  50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை - ஆய்வில் தகவல்

இது தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அமைச்சர்களுடன் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்தாண்டு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடக்க உள்ளதால் அதற்கேற்ப அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் 10 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 27 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் இருந்து பாஜவில் சேர்ந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, ராஜஸ்தானின் பாஜ தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ், மத்திய பிரதேசத்தை சேர்ந்த கைலாஷ் விஜயவர்கியா, பாஜ செய்தி தொடர்பாளர் சயீத் ஜாபர், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனாவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, கோபிநாத் முண்டேவின் மகள் எம்பி பிரீதம் முண்டே போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Also Read  நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

மேலும், உபி பாஜ தலைவர் சுவதந்திர தேவ் சிங், பங்கஜ் சவுதிரி, வருண் காந்தி, அனுபிரியா படேல், மாநிலங்களவை எம்பி அனில் ஜெயின், ஒடிசா எம்பி அஸ்வினி வைஷ்ணவ், முன்னாள் மேற்கு வங்க மாநில ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் 27 அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

சில தினங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக பாஜக மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

தாயானார் ஸ்ரேயா கோஷல்! – என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?

Shanmugapriya

எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Lekha Shree

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan

நேற்று தேவாலயம்.. இன்று நெல்லையப்பர் கோயில்… தமிழகத்தில் மாஸ் காட்டும் ராகுல் காந்தி!

Shanmugapriya

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வென்றால் பரிசு! – வைர வியாபாரியின் அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!

Shanmugapriya

‘அமைதியான’ நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்

Tamil Mint

தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

Tamil Mint

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint