72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி


பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. 

அந்நிகழ்ச்சியில் அவர் கோவையைச் சேர்ந்த காயத்ரி எனும் சிறுமியைப் பாராட்டிப் பேசினார். கோயம்புத்தூரில் காயத்ரி என்பவர், தன் தந்தையுடன் சேர்த்து நாய்க்காக ஒரு சக்கர நாற்காலியைச் செய்திருக்கிறார். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் போதுதான் இது சாத்தியமாகிறது எனக் கூறி காயத்ரி மற்றும் அவரது தந்தையைப் பாராட்டி இருக்கிறார் பிரதமர்.

Also Read  திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

தொடர்ந்து பேசிய அவர், “இந்தமுறை இந்தியா ‘ஆத்மநிர்பார்’ (தற்சார்பு இந்தியா திட்டம்) என்கிற புதிய திறனை மேம்படுத்திக் கொண்டது. தற்போது வாடிக்கையாளர்களும் இந்தியாவில் தயாரான பொருட்களைக் கேட்கிறார்கள். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். உலகிலேயே தலை சிறந்த பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு நம் தொழில்முனைவோர்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் முன் வர வேண்டும்.

இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்த 7,900 எண்ணிக்கையில் இருந்து, 2019-ம் ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்து 12,852 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக மத்திய இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் சிங்கம், புலி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன. வனப் பகுதிகளின் அளவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு அரசு மட்டும் காரணமல்ல. மக்கள், சிவில் சொசைட்டிகள், மற்ற அமைப்புகள் என பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

Also Read  பிச்சை எடுத்து லட்சக்கணக்கில் பணம் சேர்த்த மூதாட்டி - மோடி, கருணாநிதியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்...!

டெல்லியில் இருக்கும் ரகப் கன்ச் குருத்வாராவில் சீக்கிய குரு, கோபிந்த் சிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதை பெருமையாகக் கருதுகிறேன். குரு கோபிந்த் சிங் அவர்களின் குடும்பம் செய்த தியாகத்துக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த மே 2020-ல் காஷ்மீரின் குங்குமப் பூவுக்கு புவிசார் குறியீட்டை வழங்கினோம். இதன் மூலம் நம் காஷ்மீரின் குங்குமப்பூவை, நாம் உலக அளவில் ஒரு பெரிய பிராண்டாக உருவாக்க வேண்டும்” எனக் கூறினார்.

Also Read  பெற்றோர் விவசாயத்திற்கு சென்றுவிட்டனர்! - தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம்! உறவினர்கள் கதறல்..!

Lekha Shree

டெல்லிக்கு செல்லும் ஹரியானா விவசாயிகள்! – போராட்டத்திற்கு ஆதரவு!

Shanmugapriya

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு…!

Lekha Shree

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

‘மக்களே உஷார்…!’ – மேட்ரிமோனி வெப்சைட் மூலம் இப்படியும் ஒரு மோசடி…!

Lekha Shree

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த உ.பி. மக்கள்…!

sathya suganthi

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Shanmugapriya