கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்…!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் விக்ரம். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் நாயகன் நரேன் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஆனால், அவருக்கான கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Also Read  "தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது" - யாஷிகா தாயார் உருக்கம்..!

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நரேன் அவரது அஞ்சாதே மற்றும் முகமூடி படங்களில் நடித்தார்.

அஞ்சாதே படம் நரேனின் திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக உள்ளது. அதன் பிறகு நீண்ட நாட்களாக நல்ல வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் லோகேஷ் கனகராஜ் தனது கைதி படத்தில் அவரை நடிக்க வைத்தார். அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து அவரே பகிர்ந்துகொண்டார்.

Also Read  பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?

லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தை முடித்து விக்ரம் பட அறிவிப்பை வெளியிட்ட போது அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் நரேன்.

அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ், “விக்ரம் படத்தில் உங்களுக்கும் ஒரு வேடம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Also Read  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

“பல நடிகர்களை போல கமல் படங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நான். இப்போது அவர் கூடவே நடிக்க இருப்பது கனவு போல் உள்ளது” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் நரேன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

Lekha Shree

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்… வைரல் போட்டோஸ்…!

Tamil Mint

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்…!

Lekha Shree

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!

Lekha Shree

“பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” – ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

Shanmugapriya

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

பூர்ணாவிடம் திருமண மோசடி: நான்கு நபர்கள் கைது

Tamil Mint

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj