புதிய மத்திய அமைச்சரவையில் உ.பி.க்கு முக்கியத்துவம்…!


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் நேற்று நடந்தது.

அதில், வயது மூப்பு மற்றும் உடல்நிலை கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் 12 பேர் பதவி விலகி உள்ளனர்.

புதிய முகங்கள் மற்றும் இளம் வயதினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 43 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அடுத்த ஆண்டில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா , மணிப்பூர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 முக்கிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில், நேற்று நடந்த இந்த அமைச்சரவை மாற்றம் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் மோடி தனது ஆட்டத்தை துவங்குவதாகவும் கூறப்படுகிறது.

புதிய பட்டியலில் உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை அதிகபட்ச அமைச்சர்களை பெற்ற மாநிலமாகவும் உள்ளது.

புதிய 43 மத்திய அமைச்சர்களில் உத்தரப்பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

குஜராத் 6, மேற்கு வங்கம் 4, மஹாராஷ்டிரா 4, பீகார் 3, கர்நாடகா 3, மத்தியப் பிரதேசம் 2 , ஒடிசா தரப்பில் 2 பேர் உள்ளனர்.

தமிழகம், அசாம், ஹிமாச்சல் பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், டில்லி, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அருணாச்சல பிதேசம் சார்பில் தலா 1 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Also Read  கேரளா: ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தினமும் கோமியம் குடிக்கிறேன் – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

sathya suganthi

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

இப்படியும் ஒரு மாமியாரா? – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக எடுத்ததால் பரபரப்பு!

Lekha Shree

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் சசிகலா நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Tamil Mint

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர் களுடன் ஆட்டோ! – கொரோனா நோயாளிகளுக்கு உதவ டெல்லியில் அசத்தல்!

Shanmugapriya

மிரட்டலுக்கு அசராத சசிகலா – 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்!

HariHara Suthan