“என்னம்மா இப்படி பண்றீங்களே மா?” – சிக்னலில் நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்..!


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் ராசோமா சதுக்கத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

இந்தூர் நகரில் உள்ள ராசோமா சதுக்கம் எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலை. அங்கு ரெட் சிக்னல் போட்டவுடன் ஒரு பெண் திடீரென்று Zebra crossing-ல் வந்து நடனமாடியுள்ளார்.

அந்தப் பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்து உள்ளார். பின்னர் சிக்னல் பச்சை நிறமாக மாறியதும் அப்பெண் காரில் ஏறி சென்றுள்ளார்.

தனது நடனம் மூலம் முகக்கவசம் அணிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அப்பெண். இவரின் நடனம் வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அவர்களும் வீடியோவை எடுத்தனர்.

Also Read  நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

அவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த மற்றும் வழிகாட்டு தன்னார்வ தொண்டு செய்யக்கூடிய மக்களுக்காக இந்தூர் காவல்துறையால் தொடங்கப்பட்ட பிரச்சாரம் இது என தவறாக கருதினர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து விதி மீறலுக்கான நோட்டீசை அதிகாரிகள் அப்பெண்ணுக்கு வழங்கியுள்ளனர்.

Also Read  வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

மேலும், வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்த விசாரணையின் போது தான் அந்தப் பெண் ஸ்ரேயா கல்ரா என்ற பெண் மாடல் என்பது தெரியவந்துள்ளது.

Also Read  டெல்டா பிளஸ்: இந்த 3 மாநிலங்களுக்கு தான் எச்சரிக்கை

அவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை முழுவதுமாக மறுத்துள்ளார்.

மேலும், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

கலவையான விமர்சனங்களை பெற்று இந்த வீடியோ பரவலாக ஷேர் செய்யப்பட்டு தீயாக பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!

Devaraj

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Devaraj

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

suma lekha

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்..!

Lekha Shree

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree