a

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 6 மாத குழந்தையை அதன் தாய் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரை வலியுறுத்தினர்.

அந்த வீடியோவில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் நாக்பூரில் உள்ள அம்பஜாரி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தையை கண்மூடித்தனமாக அடித்துள்ளார் என்று தெரியவந்தது.

இச்சம்பவம் மே 24ம் தேதி நடந்துள்ளது. வீட்டில் குழந்தையின் அம்மாவுக்கும் அவர் மாமியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

Also Read  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

அப்போது குழந்தை அழுது கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை அதன் அம்மா கண்மூடித்தனமாக அடித்துள்ளார். வீட்டில் இருந்த மற்றொரு உறவினர் இதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து விட்டார்.

அவர் அந்த வீடியோவை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதை அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்ததால் வீடியோ வைரலாக பரவியது.

Also Read  2வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

அதன்பிறகு பிரச்சினை போலீசார் வரை சென்றதும் போலீஸ் விரைந்து செயல்பட்டு குழந்தையையும் அதன் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

குழந்தையை அடிக்க கூடாது என்று பெற்றோருக்கு போலீசார் ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

மாமியாரும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கம் என்று அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். அதை விசாரித்தபோது குழந்தையின் பாட்டி வீட்டு வேலை செய்து மாதம் ரூ.2000 சம்பாதிக்கிறார்.

அதைவைத்துதான் அனைவரும் சாப்பிட வேண்டியிருக்கிறது. குழந்தையின் அப்பா ட்ரம்ப் இசைக்கும் கலைஞராக இருக்கிறார்.

Also Read  அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! - பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பதால் வறுமையும் மன அழுத்தமும் சேர்ந்த அந்த தாயை ஆத்திரமடைய செய்துள்ளது. எனவே, குழந்தையை கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

உங்களுக்கு 75 வயதாகிறதா? இனி Income Tax கிடையாது?

Tamil Mint

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! – எங்கு தெரியுமா?

Lekha Shree

ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் – மத்திய அரசு அனுமதி!

Lekha Shree

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு – எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

sathya suganthi