“கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை!” – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் வருமானத்திற்கு அதிகமாக விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என விஜயபாஸ்கர் தரப்பில் விலக்கு கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

Also Read  பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனிக் கட்சி தொடக்கம்?

அதனை அடுத்து விஜயபாஸ்கருக்கு அக்டோபர் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவர் சகோதரர் சேகர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

Also Read  பெட்ரோல், டீசல் விலை உயர்வு - 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அதன்பிறகு இன்றும் விசாரணை நடைபெற்றது. சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்த விசாரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஆர்,விஜயபாஸ்கர், “என்னிடம் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு நான் பதிலளித்தேன்.

விசாரணையின் போது எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. மேலும், கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்தார்.

Also Read  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #boycottzomato மற்றும் #Reject_Zomato …! என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை..!

Lekha Shree

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டங்கள்… அதிருப்தியை வெளிப்படுத்திய கோர்ட்!

Tamil Mint

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறது திமுக” – அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Lekha Shree

நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் – நிதியமைச்சர் பெருமிதம்

mani maran

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்..!

Lekha Shree

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்…. “நம் இன்பம், துன்பம் இரண்டு நமக்கு ஒன்றே”… இறப்பிலும் இணைபிரியாத அன்பு…..

VIGNESH PERUMAL

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

“நீங்கள் அழுதது மகிழ்ச்சி… பை பை பாபு..!” – சந்திரபாபு நாயுடுவை விளாசிய நடிகை ரோஜா..!

Lekha Shree