a

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்எஸ் தோனி அட்டகாசமாக டைவ் அடித்த காட்சி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களமிறங்கிய எம்எஸ் தோனி தொடக்கத்திலேயே ராகுல் திவாட்டியா பந்தில் சிங்கில் எடுக்க முயன்று கிரீசை விட்டு வெளியேறினார்.

எதிர்முனையில் ஜடேஜா சிங்கில் எடுக்க மறுத்ததால் மீண்டும் கிரீசுக்குள் நுழைய பந்து வேகமாக கீப்பர் வசம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி டைவ் அடித்து நூலிழையில் ரன் அவுட்டில் இருந்து தப்பிப்பார்.

தொடர்ந்து விளையாடிய அவர் அந்த ஆட்டத்தில் 18 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினார். தோனியின் பிட்னஸ் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரசிகர்கள் தோனி டைவ் அடித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also Read  4வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் சுழலுக்கே சாதகமாக இருக்கும்; ரஹானே!

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியின் போது தோனி ரன் அவுட்டான புகைப்படத்தை நேற்றைய நிகழ்வோடு ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டைவ் அடித்ததை நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது செய்திருந்தால் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருக்கும் என தங்களது வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான வீரர்கள் விவரத்தை அறிவித்தது பிசிசிஐ:

உலகக்கோப்பை அரையிறுதியில் 10 பந்துகளில் 25 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்படும் சமயத்தில் தோனி மார்ட்டின் கப்தில் வசம் சிக்கி ரன் அவுட்டானார்.

அந்த காட்சி இன்று வரை பலரையும் உலுக்கக்கூடியதாகவே மாறிப் போயுள்ளது. என்ன இருந்தாலும் தோனியை குறை கூறவே முடியாது என அவரது ரசிகர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்

Also Read  கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை வந்தடைந்தார் விராட் கோலி!

Jaya Thilagan

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் – ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

HariHara Suthan

வாழ்வா சாவா ஆட்டம்! – சவாலை சமாளிக்குமா இந்திய அணி?

Lekha Shree

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

சதுரங்கத்தில் சாதித்த இந்தியா

Tamil Mint

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது

Tamil Mint

14-வது ஐபிஎல் தொடருக்காக சென்னை வரும் ‘தல’ தோனி…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

Lekha Shree

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

Jaya Thilagan

ரோஹித், ஷ்ரேயாஸ்க்கு காயம் – கதி கலங்கும் ஐபிஎல் அணிகள்

Devaraj

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree