முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – நடிகர் பிருத்விராஜ் உருவப்படம் எரிப்பு..!


பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டரில் நேற்று, “125 ஆண்டு கால பழமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர்.

Also Read  மகனுக்கு பரிசளிக்க ஒரு வருடத்தை செலவழித்த பாசமிகு தந்தை… எதற்காக தெரியுமா?

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து கேரளாவில் உள்ள சிலர் அணைக்கு எதிராக விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர் எனவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ரசூல் ஜோய் மற்றும் அரசு மருத்துவர் ஜோசப் வரிசையில் தற்போது பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இணைந்துள்ளதாகவும் கருத்து கூறியுள்ளனர்.

நடிகர் பிருத்விராஜின் இந்த கருத்து தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பரவி வரும் விஷமக் கருத்துக்களை கண்டித்து தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read  'திருச்சிற்றம்பலம்' - லீக்கான தனுஷ்-நித்யா மேனன் டான்ஸ் வீடியோ…!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திடீரென எதிர்பாராத விதமாக அரசு வழக்கறிஞர் ரசூல் ஜோய் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோரின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர்.

மேலும் தங்கள் காலணிகளை கழற்றி அவரது உருவப்படத்தின் மீது எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Also Read  வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்...!

இதனால் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. இது தொடர்பாக பேசிய தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். ஆர். சக்கரவர்த்தி, “பல்வேறு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு உறுதியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பி வரும் வழக்கறிஞர் ரசூல் ஜோய், நடிகர் பிருத்திவிராஜ் உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தை தமிழக முதல்வர் ஏற்கக்கூடாது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

ரஜினியுடன் மோதும் அஜித்… தீபாவளிக்கு காத்திருக்கும் படங்கள்…!

suma lekha

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் வலிமை..! தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Lekha Shree

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

உலகக் கோப்பை டி 20: நியூசிலாந்து அணியிடம் இந்தியா சரண்டர்.!

suma lekha

வடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’?

suma lekha

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

ஆப்கானிஸ்தான்: 150 இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபான்கள்..! என்ன நடக்கிறது?

Lekha Shree

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

sathya suganthi

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree