a

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ


கொரோனா பரவல் உச்சமடைந்து வரும் நிலையில், மும்பையில் நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்று நோய் நிபுணர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ நெஞ்சை ரணமாக்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

Also Read  "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது" - தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

குறிப்பாக தலைநகர் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதமும் தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதமும் நிரம்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மும்பையில் நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான மருத்துவர் தி்ருப்தி கிலாடா கண்ணீர் ததும்ப பேசும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம் என்றும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பீதியடைந்துள்ளனர் என்றும் தாங்கள் அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது என்றும் படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் திருப்தி குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ உங்களை ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம் என்றும் பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்கவிளைவு – அசால்ட்டாக 2வது டோஸ் போடுக்கொண்ட மோடி…!

கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருப்தி தனது வீடியோவில் அறிவுறுத்தி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

Tamil Mint

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் – மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

Tamil Mint

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint