விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மிதக்கும் மும்பை…!


மும்பையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை நகரம் மிதப்பதால் புறநகர் ரயில் சேவை, பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், செம்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மழைக்கு தாங்காமல் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானார்கள். 16 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்று தீவிரமடைந்துள்ளதால் மும்பைக்கு 48 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் 100 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மும்பைக்கு முதலில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது தற்போது ரெட் அலெர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

Also Read  சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

வங்காள விரிகுடாவில் உருவானது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?

Tamil Mint

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

“சீனாவின் கைப்பாவை…. டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj