a

டி காக் அதிரடியால் வெற்றி பாதைக்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ்!


டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடி நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.

பட்லர் 41 ரன்களில் விடைபெற ஜெய்ஸ்வால் 32 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசினார் 42 ரன்கள் சேர்த்தார்.

தனது பங்கிற்கு ஷிவம் துபே 35 அணி எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

Also Read  சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு - சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

ரோஹித் சர்மா 14 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க சூரியகுமார் – டி காக் ஜோடி நிதானமாக விளையாடியது. 16 ரன்களில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆன நிலையில் டி காக் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிரடியாக விளையாடிய குருனால் பாண்டியா 26 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போலார்ட் தனது பங்கிற்கு 16 ரன்கள் விளாச மும்பை அணி 18வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை வசப்படுத்தியது.

Also Read  ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7-வது இடத்தில் உள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

சென்னை அணியில் புதிதாக இணையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி..

Jaya Thilagan

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

அதென்ன 54 – கொல்கத்தா அணி கிளப்பிய சர்ச்சை!

Jaya Thilagan

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

Devaraj

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

கடின உழைப்பால் மீண்டெழுந்தேன் – சொல்கிறார் பிரித்வி ஷா!

Jaya Thilagan