12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!


இந்திய மாநிலமான ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துளசி குமாரி (11). இவரது தந்தை ஸ்ரீமல் குமார் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.

கொரோனா காரணமாக இந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளும் மூடப்பட்டதால் துளசியின் படிப்பும் பாதிக்கப்பட்டது. தான் கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளை படிக்க வைத்துவிட வேண்டும் என அந்த தந்தை நினைத்தாலும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் தவித்தார் ஸ்ரீமல்.

Also Read  சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

இதனால் தந்தைக்கு உதவியாக சிறுமி துளசி சாலையோரத்தில் மாம்பழங்களை விற்கத் தொடங்கினார். அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தார்.

சிறுமி துளசிக்கு குறித்த தகவல் இணையத்தில் வைரலான நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே சென்று துளசியை தேடிக்கண்டு பிடித்தார்.

அதோடு 12 மாம்பழங்களை கையோடு வாங்கிய நிலையில் அதற்கான தொகையை துளசி-ன் தந்தையின் வங்கிக் கணக்குக்கு 1.2 லட்சம் ரூபாயை உடனடியாக ஆன்லைன் வழியாக செலுத்தினார்.

மேலும், இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட்போன் வாங்கி தொடர்ந்து படிக்க வேண்டுமென துளசியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார்.

Also Read  கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

எந்த சூழ்நிலையிலும் படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என நினைத்த துளசியையும் சிறுமியை தேடி கண்டுபிடித்து உதவி செய்த தொழிலதிபரின் செயலையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

வேகமெடுக்கும் டெல்டா பிளஸ்…! இதுவரை 51 பேர் பாதிப்பு…!

sathya suganthi

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

Devaraj

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!

sathya suganthi

வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

Tamil Mint

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya