a

மும்பை – டெல்லி இன்று மோதல்!


ஐபிஎல் தொடரில் இன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் எதிர்கொள்கிறது.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்ற டெல்லி அணி இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.

3-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் வெற்றி பெற்ற டெல்லி அணி ஐபிஎல் தரவரிசையில் மூன்றாவது இடம் வகிக்கிறது. இதுவரை மூன்று போட்டிகளை மும்பையில் விளையாடிய அனுபவம் கொண்ட டெல்லி அணி முதல் முறையாக இன்று சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்குகிறது.

டெல்லி அணியில் ஷிகர் தவான் நல்ல பார்மில் உள்ளார். பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், வோக்ஸ், ஆர்.அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான், ஸ்மித், லலித் யாதவ் என அதிரடிக்கு பஞ்சமில்லாமல் களமிறங்குகிறது டெல்லி அணி.

Also Read  ஐதராபாத்க்கு வந்த சோதனை - சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

கடந்த ஆட்டத்தில் தவானை தவிர்த்து இதர வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே மும்பை அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

அதேசமயம் மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த ஆட்டங்களில் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் துவம்சம் செய்தது.

Also Read  கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

புள்ளிப் பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள மும்பை அணி இன்றைய ஆட்டத்தை வெல்ல முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா – டி காக் ஜோடி தொடக்கத்தில் அதிக ஸ்கோர்கள் அடித்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன், சூர்ய குமார் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவது அவசியம்.

இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே சொல்லலாம்

Also Read  10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல - மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து வெளியான தகவல்…!

Lekha Shree

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

ஊதா கலர் தொப்பி – ஐபிஎல் ல அதிக விக்கெட் எடுத்தவர் இவரா?

Jaya Thilagan

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

Jaya Thilagan

அதென்ன 54 – கொல்கத்தா அணி கிளப்பிய சர்ச்சை!

Jaya Thilagan

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

Jaya Thilagan

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

Devaraj