a

கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய தீம் இசையை ஏலம் விடும் ஜிப்ரான்..!


சஹோ படத்துக்காக உருவாக்கப்பட்ட தீம் இசையின் மூலம் கொரோனா நிவாரண நிதி திரட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

மேலும் சிலர் தங்களுடைய ஓவியங்களை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் அவருடைய இசையை ஏலம் விடுவதன் மூலம் வரும் வருமானத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஹோ படத்தின் நாயகன் தீம் இசையை NFT (Non-Fungible Token) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Also Read  மக்கள் செல்வனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட டீசர் இன்று வெளியீடு!

இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழக முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கும் அடுத்த 50% கொரோனா காரணமாக வேலை இல்லாமல் அவதிப்படும் இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்படும்.

இதுதான் இந்தியாவில் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட NFT முயற்சி ஆகும். இந்த இசைத் தொகுப்பை பட இயக்குனரை தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை. இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்து இருந்தது.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி வேறு வகையிலான இசை துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையை எங்குமே வெளியிடவில்லை.

NFT வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏலத்தில் பங்கு கொள்ளும் உறுப்பினர்கள் இந்த இசைத் தொகுப்பை உயரிய விலை கொடுத்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்புக்கு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும்.

Also Read  'தளபதி 65' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

அதிக தொகையில் ஏலம் எடுப்பவர்களுக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும். எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

HariHara Suthan

முதல் முறையாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் ‘மாஸ்’ ஹீரோ?

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிரூத்தை நீக்கிய பிரபல இயக்குனர்கள்…

VIGNESH PERUMAL

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

சந்தன கடத்தல் வீரப்பனின் வாரிசா இவர்…. தமிழ் சினிமாவின் புதிய நடிகை….

VIGNESH PERUMAL

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL