a

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!


பிடிமானம் இல்லாத தூண் மீது ஏறும் முயற்சியில் பல தோல்விகளுக்குப் பிறகும் விடாமுயற்சியுடன் வெற்றி பெற்றிருக்கிறார் சிறுமி ஒருவர்.

இந்த வீடியோவை பார்த்த ஐஏஎஸ் அதிகாரி எம்.வி. ராவ் சிறுமியின் முயற்சியால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சிறுமி தான் என்னுடைய குரு என பதிவிட்டுள்ளார்.

சமூகபற்றாளர் ஆன ஐஏஎஸ் அதிகாரி எம்.வி. ராவ் தற்போது மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இயற்கை சார்ந்த விஷயங்களையும் பிறருக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையிலான பதிவுகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Also Read  12வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது சிறுமி! - உயிர் தப்பிய அதிர்ஷ்டம்! - வைரலாகும் வீடியோ

அந்த வகையில் அவர் பகிர்ந்துள்ள அந்த சிறுமியின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த சிறுமி ஒருவர் பிடிமானம் இல்லாத உயரமான தூண் மீது ஏற முயற்சிக்கிறார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிகிறது. இதுபோல் தொடர்ந்து 7 முயற்சிகளிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கிறது.

ஆனால் இறுதிவரை மனம் தளராத அச்சிறுமி போராட்ட குணத்தை வெளிப்படுத்தி அந்த தூணின் உச்சத்தை தொட்டு வருகிறார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.

Also Read  விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

இதனிடையே மற்றொரு வீடியோவில் அதே சிறுமி கால்பந்தாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் செய்யும் அனாயாசமான மூவ்களை செய்து அசத்துகிறார். மேலும், ரிவர்ஸ் ஷாட் ஒன்றையும் அடிக்கிறார்.

அந்த காட்சி உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்ஸ்டாகிராமில் arat.gym என்ற பெயரில் வெரிபைட் அக்கவுண்ட் வைத்திருக்கும் அந்த சிறுமியை 5.8 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

Also Read  சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை..!

Lekha Shree

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

“தெய்வ குதிரை” இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்கள் – கிராமத்துக்கே சீல் வைத்த அதிகாரிகள்

sathya suganthi

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

Tamil Mint

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya