a

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி – நவாமி ஒசாகா விலகலின் பின்னணி…!


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் டென்னிஸ் வீராங்கனை நவாமி ஒசாகா. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நவாமி ஒசாகா ஜப்பானைச் சேர்ந்தவர்.

ஒரே போட்டியில் உலகையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். கடந்த 2018ம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முடிசூடா ராணியாக விளங்கிய செரீனா வில்லியம்சை நேர் செட்களில் வீழ்த்தி பட்டத்தை வென்றவர்.

டென்னிஸ் உலகில் ராணியாக உள்ள செரீனாவுக்கு முன்பாக 20 வயதில் ஒரு கத்துக்குட்டியாக களமிறங்கிய ஒசாகா ஒன்னேகால் மணி நேரத்தில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read  ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

இதனை அடுத்து மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார் ஒசாகா. தற்போது சர்ச்சையால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ருமேனியாவின் மரியா டிக் உடன் மோதி வெற்றி அடைந்தார்.

ஆனால், அவர் விதிமுறைக்கு முரணாக நடந்து கொண்டதாக 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதனை அடுத்து மற்ற வீரர்கள் செய்தியாளர்களிடம் பேசியதை சுட்டிக்காட்டி ஒசாகாவை விமர்சிக்கும் வகையில் பிரெஞ்சு ஓபன் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடப்பட்டது.

Also Read  பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

இதற்கு முன்னாள் வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அப்பதிவுகள் நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் ஒசாகா.

இது குறித்து விளக்கமளித்து இருக்கும் ஒசாகா, “2018ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதில் இருந்து நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன். அதிலிருந்து மீள போராடி வருகிறேன்.

Also Read  ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை கொண்டவள் என்பது தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.

செரினா வில்லியம்ஸ் உட்பட பலரும் ஒசாகாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 23 வயதாகும் ஒசாகா உலகில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2019ம் ஆண்டு மட்டும் அவர் ஈட்டிய தொகை ரூ.284 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20

Devaraj

இந்தியா எப்போதுமே கெத்து தான் – கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி

HariHara Suthan

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Tamil Mint

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

கே.எல். ராகுலின் பொறுப்பான ஆட்டம் – பெங்களூரை வென்ற பஞ்சாப் கிங்ஸ்!

Devaraj

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் இல்லை!

Tamil Mint

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா?

Lekha Shree

இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!

Jaya Thilagan

2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

Lekha Shree

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

Bhuvaneshwari Velmurugan

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை…! மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட புகைப்படம்…!

Devaraj