a

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் நடராஜன்!


கடந்த ஐபிஎல் சீசனில் துல்லியமான யார்க்கர்கள் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர் தமிழக வீரரான நடராஜன்.

சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி பல முக்கிய விக்கெட்களை எடுத்துக் கொடுத்த நடராஜனுக்கு அணியின் முக்கிய இடம் இருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த நடராஜனுக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சன் ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய நடராஜன் காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.

Also Read  ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

இந்த நிலையில் காயத்தில் இருந்து மீள சில வாரங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் உறுதி செய்துள்ளது.

யார்க்கர் மன்னன் நடராஜன் இல்லாதது அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

தனது விலகல் குறித்து பேசிய நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட பல்வேறு எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் தற்போது அணியில் இருந்து விலக நேர்ந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

Also Read  கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

சன் ரைசர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது வேதனை அளிப்பதாக கூறிய அவர், அணி குறித்து பேச வார்த்தைகளே இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார்.

மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் நடப்பு தொடரில் விளையாட முடியாமல் போனதாகவும் இருப்பினும் சன் ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்…! காரணம் இதுதான்…!

தொடர்ந்து காயத்தால் நடராஜன் அவதிப்படுவதால் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

Lekha Shree

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை – ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!

Lekha Shree

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

பொல்லார்டை ஒப்பிட்டு தமிழக வீரரை பாராட்டிய அனில் கும்ப்ளே!

Jaya Thilagan

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj