மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!


திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின்வெட்டு குறித்த பிரச்சனை விவாதப் பொருளாகி உள்ளது.

அணில்களால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் கூறியது இணையத்தில் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கு அத்துறையைப் பற்றி முழுமையாக புரிதல் இல்லாததுதான் என்று கூறினார்.

Also Read  இன்ஸ்டாகிராம் நட்பு - கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

மின்வெட்டை தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது எது என்பதுபோல் திமுகவும் மின்வெட்டும் தான் என்றும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து மின்வெட்டும் வந்துவிடும் என்றும் கூறிய அவர், இது குறித்து சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் முன்பு திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென்றார்.

Also Read  நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவு - புதிய அறிவுப்பை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்…!

அதேபோல் திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது என்றும் திமுக ஆட்சியில் அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என இருக்கும் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

நாங்கள் சாதனையைதான் முன்னிறுத்திக்கின்றோம், சாதியை அல்ல – மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்

Tamil Mint

மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்

Tamil Mint

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

sathya suganthi

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

’டேனிஷ் சித்திக்கை தாலிபான்கள் துன்புறுத்தி கொன்றார்கள்’ – அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட பகீர் தகவல்!

suma lekha

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint