‘நவரசா’ ஆந்தாலஜி – தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!


நவரசங்களை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள 9 படங்களின் தொகுப்பு தான் நவரசா. திரை உலகினருக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது இந்த வெப்தொடர்.

இதை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

காதலை மைய கருவாக வைத்து உருவாகி உள்ள குறும்படம் தான் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. இதில் சூர்யா, பிரக்யா மார்ட்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியுள்ளார்.

இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் ஆச்சரியத்தை மையக் கருத்தாக வைத்து ‘பிராஜக்ட் அக்னி’ என்ற தலைப்பில் குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

Also Read  தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் 'தோழா' இயக்குனர்?

பிஜாய் நம்பியார் இயக்கும் குறும்படத்திற்கு ‘எதிரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கும் இப்படம் கருணையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் சாமி இயக்கியுள்ள குறும்படத்திற்கு ‘ரௌத்திரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரித்திகா, ஸ்ரீ ராம், ரமேஷ் திலக் போன்ற நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

Also Read  'தி பேமிலி மேன் 2' - சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் குறும்படத்துக்கு ‘பீஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கௌதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நகைச்சுவையை மையக் கருத்தாக வைத்து உருவாகியுள்ள குறும்படம் ‘சம்மர் ஆப் 92’. இதை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு போன்றவர்கள் இதில் நடித்துள்ளார்கள்.

சர்ஜுன் இயக்கும் குறும்படம் தைரியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘துணிந்த பின்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பயத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் தான் ‘இன்மை’. இந்திரன் பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் பார்வதி, சித்தார்த் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

Also Read  ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

வசந்த் சாய் இயக்கும் குறும்படத்திற்கு ‘பாயசம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருவருப்பை மையக் கருத்தாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கார்த்தியின் கைதி 2 மற்றும் ரீமேக்கிற்கு தடை

sathya suganthi

ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

suma lekha

விஜய் டி.வி. ரக்‌ஷனின் மனைவி இவரா?… வைரலாகும் தம்பதியின் இளம் வயது போட்டோ…!

Tamil Mint

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

Bhuvaneshwari Velmurugan

என்.டி.ஆருக்கு ‘பாரத ரத்னா’ விருது கோரும் சிரஞ்சீவி…!

Lekha Shree

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree

”எனது கனவுகளை பின் தொடர்கிறேன்” செல்வராகவன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

ஆக்சன் காட்சி போது செம்ம அடி : உடைந்த மூக்குடன் மன்னிப்பு கேட்ட சாரா அலிகான்

suma lekha

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan