a

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸின் 4வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை சம்யுக்தா.

இவர் அந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும் நடிகர் ஆரியுடனான சண்டையில் அவர் பேசிய வார்த்தைகளால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். அதைத்தொடர்ந்து அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Also Read  நடிகர் அஜித் செல்பி விவகாரம் - விஜய் டிவி டிடியின் ட்வீட்!

அதன்பின், சில டிவி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும், சீரியல்களிலும் அவர் பங்கேற்றார். இவர் நடிகை ராதிகா இயக்கிய சந்திரகுமாரி சீரியலில் ராணி வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரல் ஆனது.

கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடி விக்னேஷ் சிவன்-நயன்தாராவுடன் இவர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனால், அவர்களுக்கும் சம்யுக்தாவுக்குமான தொடர்பை அறிய பலர் ஆவலோடு தேடினர்.

இறுதியில் அவர் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த புகைப்படம் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்தது என்றும் தெரியவந்துள்ளது.

Also Read  17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

சம்யுக்தா, விக்னேஷ் சிவன்-நயன்தாராவுக்கு இவ்வளவு நெருங்கிய நண்பராக இருப்பார் என யாரும் அறிந்திருக்கவில்லை. எனவே, இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ட்ரெய்லர்!

Lekha Shree

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு – விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

sathya suganthi

திரைக்கு வருகிறான் கர்ணன்….. டீசர் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…

VIGNESH PERUMAL

விஜய், அஜித்திற்கு இந்த மாதிரி படம் செய்ய வேண்டும்.. பல நாள் ஆசையை சொன்ன முன்னனி நடிகர்!

HariHara Suthan

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணையும் டோலிவுட் ஹீரோ? – காதலர் தினத்தன்று அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tamil Mint

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

தேனியில் உள்ள தனது வீட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாரதிராஜா!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree