நுழைவுச் சீட்டில் ஆண் புகைப்படம்.. தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


நுழைவுச் சீட்டில் ஆண் புகைப்படம் பதிவானதால் நீட் தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளார் ஒரு மாணவி.

மதுரை செனாய் நகரை சேர்ந்த எஸ்.வெங்கடேசன் என்ற சரக்கு வாகன ஓட்டுனரின் மகள் சண்முகப்பிரியா. இவர் 2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.54 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி, 2021ஆம் ஆண்டு நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை நேற்று முன்தினம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார் சண்முகப்ரியா.

Also Read  கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!

அதில் அவரது புகைப்படத்துக்கு பதில் அலெக்ஸ்பாண்டியன் என்ற மாணவனின் புகைப்படமும் கையெழுத்தும் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கறிஞர் எம்.சரவணன் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.

Also Read  17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

இதை நிர்வாக நீதிபதி துரைசாமி உத்தரவின்பேரில் நீதிபதி சுரேஷ்குமார் இரவு 9 மணியளவில் விசாரிக்கத் தொடங்கி, அதிகாலை 12:15 மணி வரை விசாரணை நடத்தியுள்ளார்.

இறுதியில் மாணவி சண்முகப்பிரியா மதுரை வீரபாஞ்சன் சோலைமலை பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read  PSBB பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுப்பிரமணியன் சுவாமி…!

இந்த உத்தரவின் நகல் 1:30 அளவில் மனுதாரர் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவி சண்முகப்பிரியா நேற்று நீட் தேர்வு எழுதியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

ஸ்டாலின் சைக்கிள் சவாரி: குஷியில் திமுக தொண்டர்கள்

Tamil Mint

இனி ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்.!

suma lekha

சென்னையில் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

Tamil Mint

2 ஓட்டு வாங்கிய அந்த 3 பேர்…! வரலாற்று சாதனை படைத்த கரூர் வேட்பாளர்கள்…!

sathya suganthi

தமிழ் மின்ட் கருத்துக் கணிப்பு முடிவுகள்! மக்கள் ஆதரவு யாருக்கு?

Lekha Shree

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

உடைகிறதா அதிமுக? – எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தொடரும் இழுபறி…!

Lekha Shree

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha