அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்


நேற்று, மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அடுத்து வரவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து  மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலியில் கலந்துரையாடினார். 

அப்போது, “தேசிய கல்விக்கொள்கை 2020-ன் தூதர்கள் மாணவர்கள் தான். கல்விக்கொள்கையை செயல்படுத்துவதில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

“தேர்வுக்கு கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் தலா 30 கேள்விகள் என்ற நிலையை தலா 25 கேள்விகள் என்று மாற்றுவதற்கு பரிசீலனை நடந்து வருகிறது” என ஜே.இ.இ. தேர்வு பற்றிய மாணவர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண் டில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை என 4 முறை நடத்தப்படும். மாணவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண்ணே தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Also Read  கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரமேஷ் பொக்ரியால், “மத்திய சுகாதார அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். இதைப்போல 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், “செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகம் இருந்தால் இணையதளத்தில் பார்க்கலாம்’ என கூறினார்.

Also Read  டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா தொற்று..!

sathya suganthi

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

sathya suganthi

“5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை” – பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!

Lekha Shree

இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

suma lekha

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint