‘நேற்று தனுஷ்.. இன்று கனிமொழி..!’ – தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள்…!


நீட் தேர்வை சரியாக எழுதவில்லையோ என அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டடுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் என்னும் விவசாயியின் மகன் தனுஷ் (19) நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனுஷ் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், 2 முறையும் தேர்ச்சி பெறவில்லை.

அதனால் 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்தவர், தேர்வில் தோற்றால் என்னவாகும் என்ற அச்சத்தால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனுஷின் தற்கொலை சம்பவம் கூழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

Also Read  அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அறிவித்தார் ஓபிஎஸ்!

இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று நீட் தேர்வை சரியாக எழுதவில்லையோ என அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டடுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மி-கருணாநிதி தம்பதியினரின் 2வது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

அதன்பிறகு, நாமக்கல்லில் உள்ள கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

Also Read  கூடுதல் தளர்வுகள்… மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

இதையடுத்து மருத்துவ கல்லூரியில் சேர விரும்பிய கனிமொழி கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதி உள்ளார். ஆனால், அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என கனிமொழி மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று கனிமொழியின் பெற்றோர் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று உள்ளனர். இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Also Read  சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் - வானிலை ஆய்வு மையம்

பின்னர், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தம்பாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட்தேர்வு விலக்கு மசோதா தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இதுவரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 10க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை – முக்கிய குற்றவாளிகள் கைது

sathya suganthi

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

டாஸ்மாக் கடைகள் திறப்பு – பாஜக போராட்டம்

sathya suganthi

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

sathya suganthi

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

இ-பதிவில் திருமணப் பிரிவு மீண்டும் நீக்கம்…!

Lekha Shree