தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! திமுகவை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்..!


சேலத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், திமுக தேர்தல் வாக்குறுதியாக கூறிய “நீட் தேர்வு ரத்து” ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது 2வது மகன் தனுஷ் (19).

இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Also Read  180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

இதையடுத்து மருத்துவராகும் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், 2 முறையும் தேர்ச்சி பெறவில்லை.

அதனால் 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். இவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத நுழைவு சீட்டு வந்துள்ளது.

Also Read  "தமிழ் இருக்க திராவிடம் எதற்கு?" - நடிகை கஸ்தூரி கேள்வி..!

இந்நிலயில், நேற்று தனது நண்பர்களிடம் தான் 3வது முறையும் தேர்வில் தோல்வியடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடும் என விரக்தியாக பேசியுள்ளார்.

அதையடுத்து இரவு முழுவதும் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கியுள்ளனர்.

Also Read  சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்…!

அப்போது தனுஷின் தாயார் சிவஜோதி காலையில் எழுந்து பார்க்கும்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த கருமலைகூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இன்று தமிழகத்தில் இளங்கலை மருத்துவத்துக்கான நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தனுஷின் தற்கொலை சம்பவம் கூழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #உதாருவிட்டஉதய், #நீட்ரத்துஎங்கடா போன்ற ஹேஷ்டேகுகள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பலர் திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த நீட் தேர்வு ரத்தை ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் திமுக அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

“அப்பா நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்” – சுருதி மற்றும் அக்‌ஷரா அறிக்கை!

Tamil Mint

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்… பெண்களுக்கு 1500 ரூபாய்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி!

Shanmugapriya

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

ஆர்.கே.நகர் போல கும்பகோணம் மக்களையும் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக…!

Devaraj

எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

சக்கர நாற்காலியில் தேர்தல் பிரச்சாரம்! – மாஸ் காட்டும் மம்தா பானர்ஜி!

Shanmugapriya

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi