நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது


இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் கே.பி.சர்மாவுக்கும் முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. 

அதையடுத்து இன்று காலை பிரதமர் சர்மா ஒலி, மந்திரிசபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இக்கூட்டத்தில் தலைவர்களை சமாதானம் செய்து ஆட்சியை தொடர்வதற்கு பதிலாக, பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. 

Also Read  இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவு – எதனால் இந்த தண்டனை தெரியுமா…?

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் முடிவை தெரிவித்தார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து மே 10ம் தேதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

Also Read  330 அடி உயரம் எழும்பிய ராட்சத புழுதி புயல்… வைரல் வீடியோ இதோ..!

நேபாளத்தில் அடுத்த பொதுத்தேர்தல் 2022ல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நேபாள நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அதன் அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. 

Also Read  விமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி! - அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா?

ஆனால் அரசமைப்பின் 76-வது பிரிவு, அவையின் பெரும்பான்மையை பெறாத பிரதமர், ஒரு மாத காலத்திற்குள் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தை கலைக்க கோரலாம். மேலும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும் அறிவிக்கலாம் என கூறுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

‘ட்ரீ 40’ – ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்…! சாத்தியமானது எப்படி?

Lekha Shree

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

“அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை” – டிரம்ப்

Shanmugapriya

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tamil Mint

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?

Lekha Shree

“சூயஸ் கால்வாய்க்கு நீ தேவை” – நாய்க்கு குவியும் பாராட்டு!

Shanmugapriya

பாலைவனத்தில் இருக்கும் இருள் சூழ்ந்த மர்ம கிணறு… கலக்கத்தில் மக்கள்..!

Lekha Shree

சமையலறைக்குள் புகுந்த யானை… எங்கு தெரியுமா?

Lekha Shree

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint