Squid Game வெப்தொடரால் பயனடைந்துள்ள நெட்பிளிக்ஸ்..! உலகளவில் பெருகும் வரவேற்பு!


கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Squid Game என்ற வெப்சீரிஸ் வெளியான 28 நாட்களில் 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு நெட்ப்ளிக்ஸ் வரலாற்றில் குறைந்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது.

Also Read  உலக அளவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை

இப்படி உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், பலர் இந்த இணைய தொடரில் வரும் காட்சிகளை ரீகிரியேட் செய்து நடித்து டிக்டாக் உள்ளிட்ட பல செயலிகளில் பகிர்ந்து வருகின்றனர்.

கொரிய நாட்டின் பழமையான சில விளையாட்டுகளை வைத்து ஆட்களை கொல்வதுபோல் உருவான இந்தக் கதைக்களம் பலரை கவர்ந்துள்ளது.

இந்த வெப்தொடரால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய அளவில் பலனை ஈட்டியுள்ளதாக அந்நிறுவனமே தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  "அண்ணாத்த இன்னொரு திருப்பாச்சியா?" - இணையத்தில் வைரலாகும் மீம்..!

இந்த Squid Game வெப்தொடரை பார்த்து 44 லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளதாக பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Money Heist மற்றும் Squid Game ஆகிய இரு வெப்தொடர்களும் பயனர்களை கவர முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read  பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”நீச்சல் உடை அணிந்தால் விவாகரத்தா?” – வைரலாகும் வித்யூலேகாவின் லேட்டஸ்ட் பதிவு..!

suma lekha

வெளியானது ‘காடன்’ டிரெய்லர்… ஆச்சர்யத்தில் மிரள வைக்கும் காடுகளின் பிரம்மாண்டம்…!

Bhuvaneshwari Velmurugan

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ 2-வது பாடல் இன்று வெளியீடு?

Lekha Shree

வெப் தொடரில் நாயகியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான கலக்கல் அப்டேட்..!

Lekha Shree

புஷ்பாவின் ‘ஸ்ரீவள்ளி’ – ராஷ்மிகா மந்தனா கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

HariHara Suthan

கடல்கள் அனைத்தும் பனிக்கட்டியாக மாறினால் என்னவாகும்.? | கற்பனைகளின் கதை – 01

mani maran

கண்மணி அன்போடு காதலன் .. நயன்வுடன் விக்னேஷ் சிவன்!!!

suma lekha

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint