”தமிழ் தமிழர் பேச்சு எல்லாம் வேசமா?” – பாரதிராஜாவை வெளுக்கும் நெட்டிசன்கள்..!


கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் தமிழர்களின் உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டு பொங்கி எழுந்த இயக்குநர் பாரதிராஜா, இந்த ஆண்டு அமேசான் நிறுவனத்தின் பெருமையை பாடும் விளம்பரத்தில் நடித்துள்ளதால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Veteran director Bharathiraja breaks silence on Meera Mithun issue -  DTNext.in

தமிழ் திரையுலகின் பல முக்கிய மாற்றங்களும், அது யதார்த்த சினிமாவாக உருவெடுக்கவும் காரணமாக இருந்தவர் பாரதிராஜா. செட் போட்டு ஷூட் செய்த காலம் சென்று, நேரடியாக களத்திலேயே படங்கள் பிடித்து காட்டி, தமிழ் சினிமாவை நீர் ஓடைகளிலும் முட்காடுகளிலும் வயல்வெளிகளிலும் ஓட விட்டார் பாரதிராஜா.

என் இனிய தமிழ் மக்களே என்று கூறியதும் மக்களின் மனதில் வந்து நிற்பவரும் பாரதிராஜாவே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய நிலைமைக்கு காரணம் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்ட பத்த வச்சுட்டியே பரட்டை கதாபாத்திரம்.

அவரது பாணியிலேயே பலர் வந்தாலும் பாரதிராஜா என்ற பெயருக்கான தனி அந்தஸ்து இன்னும் தமிழ் சினிமாவில் அப்படியே இருக்கிறது என்றே சொல்லலாம். அவரது 16 வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள், கருத்தம்மா, முதல் மரியாதை போன்ற படங்கள் தற்போது தமிழ் சினிமாவின் கிளாசிக்ஸ் எனலாம்.

Also Read  குடியரசு தினத்தன்று நேரடியாக ஒடிடியில் வெளியாகும் விக்ரமின் 'மகான்'?

சினிமா தாண்டி பாரதி ராஜா தமிழ் சார்ந்த சிந்தனையை கொண்டவர். இவர் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வருபவரும்கூட. சில நேரங்களில் அவரது பேச்சு தவறாகவோ அல்லது சர்ச்சையாக வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவரது செயல்பாடு தான் நெட்டிசன்கள் அவரை விமர்சிக்க காரணமாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், தமிழின போராளிகளின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால் தமிழின விரோதிகள் ஃபேமிலி மேன் 2 தொடர் எடுக்கப்பட்டு இருக்கிறது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, “ தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம்,வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஷங்கர்-ராம்சரன் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

இப்படி அமேசான் நிறுவனத்தை பற்றி பேசிய பாரதிராஜா, தற்போது அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளது தான் தற்போது சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் உலக அளவில் சில்லறை வணிகம், டெலிவரி மற்றும் ஒடிடி துறையில் ஜாம்பவானாக விளங்கி வரும் அமேசான் நிறுவனம் தமிழகத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. சார்பட்டா பரம்பரை , ஜெய்பீம், சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறது அமேசான் நிறுவனம் .மேலும் பல பரிசுகளையும் அந்த நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய ஃபேமிலி மன் 2 இணைய தொடரை வெளியிட்டது.

Also Read  சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் - எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி
பேமிலி மேன் 2 சர்ச்சை

இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து உள்ளார் இயக்குனர் பாரதிராஜா. பொங்கல் பண்டிகையையொட்டி அமேசான் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கிராமத்து மருத்துவராக இருக்கும் பாரதிராஜா தனது மகனை பார்த்து பேசுவது போல அமைக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தில் பாரதிராஜா தோன்றி முழுவதும் நடித்துள்ளார்.

மீம்ஸ்களால் கலாய்க்கும் நெட்டிசன்கள்

அமேசான் நிறுவனத்தின் பெருமைகளை அவர் கூறுவது போலவும் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஃபேமிலிமேன் 2 வெப்சீரிஸ் தொடர் தற்போது வரை அமேசான் தளத்தில் இருக்கும் போது பாரதிராஜா எப்படி இதில் நடிக்கலாம் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”தமிழ் தமிழர் பேச்சு எல்லாம் வேசமா? பணம் என்றால் கொள்கை அவ்வளவு தானா?” என பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் பல்வேறு சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவளித்த ஹன்சிகா: பரிசுப்பொருட்கள் கொடுத்து உற்சாகம்…

mani maran

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தல’ அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills…!

Lekha Shree

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்கப்போவது ‘இந்த’ பிரபல நடிகையா?

Lekha Shree

“கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார்” – மருத்துவமனை அறிக்கை வெளியீடு..!

Lekha Shree

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

’சித்ரா’ தற்கொலை வழக்கு: பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான ஹேம்நாத்..!

suma lekha

“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Lekha Shree

திருமணமாக இருந்த நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த இளம் நடிகை…! சோகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு டிவி சீரியலில் இந்த வேடமா? – சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint