இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி குறித்த ட்ரோல்கள்..! கடும் கண்டனம் தெரிவித்த வீரர்கள்..!


துபாயில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.

அந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.

இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

Also Read  ஆபாச பட வழக்கு - ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார். அதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி இருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் இந்த செயலை பல முன்னாள் மற்றும் இந்நாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Also Read  ஐபிஎல் 2021: தோனி அண்ட் கோ டீம் படைக்க உள்ள சூப்பர் சாதனைகள்!

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர ஷேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஷமிக்கு ஆதரவாகவும் அதேசமயத்தில் விமர்சித்த நெட்டிசன்களை கடுமையாக சாடியும் இருந்தனர்.

அதேபோல் சஹால், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் டுவிட்டரில் “வி லவ் யூ ஷமி” என்ற ஹேஷ்டேகை பதிவிட்டிருந்தனர். அதையடுத்து பலரும் அந்த ஹேஷ்டேகின் கீழ் ஷமிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Also Read  8வது முறையாக இந்தியா சாம்பியன் : சுனில் சேத்ரி செம்ம சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி

sathya suganthi

இந்தியாவின் தவறான வரைபடம் – சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

Lekha Shree

இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! – மத்திய அரசு

Lekha Shree

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

Tamil Mint

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

ஆமை நடனமாடி பார்த்திருக்கிறீர்களா?- இணையத்தில் வைரலாகும் புதிய வீடியோ!

Shanmugapriya

கர்நாடகாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸா? பீதியில் மக்கள்

suma lekha

புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு முடிவு!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint