ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!!! சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு இடம்…


ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல், சச்சின் பைலட் ஆதரவாளர்களும் அமைச்சரவையில் இடம் பிடிக்க முனைப்பு காட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து, மந்திரிசபையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

Also Read  கொலுசுக்காக காலை வெட்டிக் கொன்ற கொடூரன்..!

முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மக்கானும் கலந்துகொண்டார். இந்த  கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவரும், தொடக்கக் கல்வித் துறை மந்திரியுமான கோவிந்த்சிங் தோத்தாஸ்ரா மற்றும் இரு மந்திரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலில் அளித்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். ஜெய்ப்பூரில் உள்ள கவர்னர் மாளிகையில் மாலை 4:00 மணிக்கு நடந்த விழாவில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாநில அமைச்சரவையின் பலம், முதல்வரையும் சேர்த்து 30 ஆக அதிகரித்தது. இன்று பதவி ஏற்று கொண்டவர்களில் 5 பேர், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ஆவார்கள்.

Also Read  'ட்விட்டர் இந்தியா': குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமனம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘அடேங்கப்பா!’ – பெங்களூருவில் இத்தனை மொழிகள் பேசப்படுகிறதா? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்..!

Lekha Shree

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!

sathya suganthi

பவுடர் வடிவிலான கொரோனா மருந்து – இன்று முதல் விநியோகம்

sathya suganthi

மருமகனுக்கு செருப்படி கொடுத்த மாமியார்… நடுரோட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

Lekha Shree

“பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற பாஜக!

Lekha Shree

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya