மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு


கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே நோய் பரவலை தடுக்க திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸாக முடியாமல் முடங்கிய நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் உட்பட பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இதையடுத்து ஓடிடி தளத்தில் திரைப்படம் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

Also Read  சரத்குமார்-ஜிப்ரான் இணையும் வெப்சீரிஸின் டைட்டில் இதுதான்…! யார் இயக்குனர் தெரியுமா?

இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது.
மேலும் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுவதால் இது போன்ற ஒரு ஓடிடி தளத்தை தாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம் என்றும் அதே நேரத்தில் பெரிய நடிகர்கள் தாங்கள் விரும்பினால் தங்கள் படங்களை இந்த தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கேரள சினிமா மற்றும் கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார்.

Also Read  பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’... மணப்பெண் யார் தெரியுமா?

மேலும் கேரள அரசின் சித்ராஞ்சலி ஸ்டூடியோஸ் மறுசீரமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தும் அளவுக்கு மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – விருதுகளை அள்ளி குவித்துள்ள ‘அசுரன்’!

Lekha Shree

‘மெட்டி ஒலி’ சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!

Lekha Shree

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!

Devaraj

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree

கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

Devaraj

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree

‘என்ன சொல்ல போகிறாய்’ – ‘குக் வித் கோமாளி’ அஷ்வினின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..!

Lekha Shree

விஜய் 65 படத்தின் புதிய அப்டேட்! சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

நடிகை ராஷ்மிகா தனது அப்பாவுடன் உள்ள கியூட் புகைப்படம்! இணையத்தில் வைரல்..

HariHara Suthan