a

புதிய PF விதி – இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!


ஜூன் மாதம் முதல் பிஎஃப் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் ஊழியர்கள் தங்களின் பிஎஃப் கணக்கின் உலகளாவிய கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யாவிட்டால் இந்த மாதம் முதல் பிஎஃப் கணக்கில் நிறுவனத்தின் சார்பில் பண வரவு வைக்க முடியாது.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கால் பலரும் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரது குடும்பம் பொருளாதார ரீதியாக மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும் அடிப்படைத் தேவைகளுக்காக ஏற்பட்டுள்ள பண நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பது அவர்களின் ஊதியத்தில் மாதாமாதம் பிடிக்கப்பட்டு வரும் இபிஎஃப் தொகையாகும்.

Also Read  35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை - வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

கொரோனா காரணமாக நிதி சிக்கல் ஏற்பட்டதால் ஈபிஎஃப் கணக்கில் இருந்து ஒரு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142 வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியரின் பிஎஃப் கணக்கின் யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read  2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

இந்த மாற்றத்தினை ஊழியர்கள் மேற்கொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் அவர்களின் பங்கை பிஎஃப் கணக்கில் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.

Also Read  வேகமாக பரவும் கொரோனா - கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

மேலும் பிஎஃப் கணக்கில் இருந்து அட்வான்ஸ் தொகையையும் எடுக்க இயலாது என்பது குறிப்பிடதக்கது. இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உடனடியாக www.epfindia.gov.in என்ற தளத்திற்கு சென்று யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை செலுத்தி ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைக்கலாம்.

பிஎஃப் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் கடந்தகால நிலுவை தொகையினை உங்களின் கணக்கில் நிறுவனம் சேர்த்து விடும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவுகிறது

Tamil Mint

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

Tamil Mint

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!

sathya suganthi

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint

திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! – நான்கு பேர் மரணம்!

Shanmugapriya

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

Tamil Mint

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj