a

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்


நாடு முழுவதும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பூஞ்சை பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

கருப்பு, வெள்ளை, மஞ்சள் என பலவகையான பூஞ்சை நோய் பாதிப்புகளால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் மூலம் இந்த நோய் பரவுவதாக வெளியாகி உள்ள தகவல் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Also Read  எவரஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா…!

வெங்காயம் வாங்கும் போது, சமயங்களில் அதன் மேல்பரப்பில் இருப்பதும், குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் ரப்பரின் மேல் கருப்பாக இருப்பதும் கருப்பு பூஞ்சை தான் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும், குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் காய்கறிகள் மூலம் கருப்பு பூஞ்சை நம் உடலினுள் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Also Read  பிளாட்டுக்கு வரச் சொன்னார் கேரள சபாநாயகர்... மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்...!

ஆனால், குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் கருப்பு நிற மோல்டு, வெங்காயத்தின் மேல்பரப்பில் இருக்கும் கருப்பு நிற அடுக்குகள் ஆகியவை கருப்பூ பூஞ்சை இல்லை என்றும் கருப்பு பூஞ்சை நோயை உருவாக்கும் பூஞ்சைகள் வேறானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் மேல் இருப்பது பொதுவாக பூமியினுள் காணப்படும் பூஞ்சைகள் தான். இந்த பூஞ்சை அஸ்பெர்கிலஸ் நைகர் என அழைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

“இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – பிரகாஷ் ஜவடேகர்

Lekha Shree

144 தடை உத்தரவு – சாரை சாரையாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!

Lekha Shree

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint