தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை


தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு,  உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. 

Also Read  தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவச கோதுமை

அதனால், தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.  

எனவே, 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…!

மேலும், அனைத்து கடற்கரைகளிலும் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்கவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read  5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya

வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!

Lekha Shree

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint

தமிழக அமைச்சர்களையும் விட்டுவைக்காத கொரோனா…!

sathya suganthi

கொரோனா நிவாரணப் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி…!

sathya suganthi

மழைக்கு வாய்ப்பு : இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

sathya suganthi

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

குறிவைக்கப்பட்ட 5 முன்னாள் அமைச்சர்கள்! டிஜிபி கந்தசாமிக்கு திமுக கொடுத்த அசைன்மெண்ட்!

Lekha Shree