a

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!


அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் மனித ரத்தத்தை பயன்படுத்தி ஷு தயாரித்துள்ளது. அதுவும் பிரபலமான நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷுக்களில் சில மாற்றங்கள் செய்து ‘சாத்தான் ஷுக்கள்’ என விற்பனை செய்துள்ளது.

இதற்கு நைக் நிறுவனம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ப்ரூக்ளினைச் சேர்ந்த MSCHF என்ற கலை பொருட்கள் சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஷுவில் தலைகீழான சிலுவை சின்னம், பெண்டாகிராம் எனப்படும் நட்சத்திர குறியீடு, லுக் 10:18 என்கிற சொல் மற்றும் ஒரு துளி மனித ரத்தத்தை பயன்படுத்தி ‘666 ஜோடி ஷுவை’ தயாரித்துள்ளனர்.

அதை கடந்த திங்கட்கிழமை அன்று விற்பனைக்கும் அறிவித்துள்ளனர். அந்த கருப்பு-சிவப்பு ஷுக்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஷுவில் விலை 1,018 அமெரிக்க டாலர்கள்.

Also Read  வாட்சப்பில் புது வசதி

இந்த ஷுவின் விளம்பரத்திற்கு பிரபல பாப் பாடகர் லில் நாஸ் எக்ஸ்-ஐ நடிக்கவைத்துள்ளனர். அவர் பாடி சமீபத்தில் வெளியான ‘மான்டெரோ’ என்ற ஆல்பத்தில் அவர் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு ஒரு கம்பத்தை பயன்படுத்தி செல்வார். அப்பொழுது அவர் கால்களில் இந்த சாத்தான் ஷுக்களை அணிந்திருப்பார்.

இந்த ஷுக்களில் பயன்படுத்தப்பட்ட உண்மையான ஒரு துளி ரத்தம் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுடையது.

Also Read  இங்கிலாந்து இளவரசராக நீண்ட காலம் வாழ்ந்த பிலிப் – அரிய புகைப்படங்களின் தொகுப்பு…!

இது சம்பந்தமாக நைக் நிறுவனம் அந்நிறுவனத்தின் மீதி வழக்கு தொடர்ந்தது. அதில், இதுபோன்ற ஒரு தயாரிப்பிற்கு நாங்கள் அனுமதி தரவில்லை.

ஆனால், எங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு சில குழப்பங்கள் நிலவி வருகிறது. மக்கள் மத்தியில் எங்கள் நிறுவனத்தின் மீதி அதிருப்தி ஏற்படும் வகையில் இந்த தயாரிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Also Read  பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாத்தான் ஷுக்களின் தயாரிப்பிற்கு இடைக்கால தடை விதித்தனர். ஆனால், இந்த தடை குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், MSCHF நிறுவனம் இனிமேல் சாத்தான் ஷுக்களை தயாரிக்க போவதில்லை என கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

Shanmugapriya

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

கொரோனா: புதிய மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

Tamil Mint

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

புத்தரைப் போல அமர்ந்துள்ள ட்ரம்ப் – சீனாவில் விற்பனையாகும் அசத்தலான சிலை!

Shanmugapriya

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint