a

கைலாசா மீது “பயோ வார்” – மர்ம விதைகள் அனுப்பப்பட்டுள்ளதாக நித்தி. பரபரப்பு குற்றச்சாட்டு


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா, பெங்களூரில் ஆசிரமம் நடத்தி தனது சொற்பொழிவுகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி உலகப் புகழ் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

Also Read  திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார்.

கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும் நித்யானந்தா வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

Also Read  இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! - நித்தியானந்தா அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர் என்றும் கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Also Read  "ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.." ஸ்டாலின் பேச்சு

தன்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன் என்றும் சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

Tamil Mint

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்…!

Lekha Shree

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் – மின்வாரியம்

sathya suganthi

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint