a

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள காவி என்ற கிராமம் கொரோனா இல்லாத இடமாக இருக்கிறது. இந்த 2-வது கொரோனா அலையின் போது கூட இந்த கிராமத்தில் யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

163 பழங்குடியினர்களுடன் சேர்த்து 1000 கிராமத்தினர் வசிக்கும் இந்த கிராமம் கொரோனா நோயாளிகள் இல்லாத ஒரே இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த கிராமம் குறித்து சீத்தாதோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜே. வின்சென்ட் சேவியர் பேசிய போது, “இங்கு வசிக்கும் அனைத்து மக்களும், சரியாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துவது போன்ற கொரோனா விதிமுறைகளை சிறப்பாக பின்பற்றுகின்றனர்.

இவர்கள் யாரும் நகரங்களுக்கோ அல்லது நெரிசலான இடங்களுக்கோ செல்வது இல்லை. ஒவ்வொரு வாரமும் இந்த கிராமத்துக்குச் சென்று சுகாதார பணியாளர்கள் பரிசோதனை செய்வோம். தற்போதைய நிலையில் அனைவரும் உடல் நலத்துடன் இருக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.

காவி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சந்திரகுமார் பேசிய போது “நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று பற்றி இந்த மக்களுக்கு எதுவும் தெரியாது. எங்களிடம் டிவி இல்லை. தொலைதொடர்பு சிக்னல் கிடைக்காது என்பதால் நாங்கள் செல்போனும் பயன்படுத்துவதில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் தான் எங்களுக்கு கொரோனா குறித்து எடுத்துக்கூறி, அதன் வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினர். நாங்களும் அதை முறையாக பின்பற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ஜூனியர் சுகாதார ஆய்வாளர், சுனில் இதுகுறித்து பேசிய போது “ தற்போது இரண்டாவது அலையின்போது வெளியூரில் வேலை செய்து, கிராமத்துக்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

Also Read  தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றினார். தனிமைப்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து அவரது குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் நாங்கள் வழிகாட்டுதல்களை வழங்கினோம். அவர்கள் அனைவரும் அதைப் பின்பற்றினர். பிறகு அவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்தது.” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே மிகச்சிறந்த வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இந்த கிராமம், தற்போது, கொரோனா நோயாளிகள் இல்லாமல் இருப்பதால் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Also Read  தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

மோடியின் நடவடிக்கைகள் “மன்னிக்க முடியாதவை” – சர்வதேச மருத்துவ இதழ்

sathya suganthi

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint