அஸர் மாலிக் என்பவரை மணம் முடித்தார் மலாலா..!


நோபல் பரிசு பெற்றவரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய், அஸர் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த 2012ம் ஆண்டு, தாலிபான்களின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை ஆதரித்ததற்காக தலிபான்களால் சுடப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலையில் பலத்த காயம் அடைந்த மலாலா இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர், தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

Also Read  2021-22ம் ஆண்டு வெளியாகும் திரைப்படங்கள் குறித்து அறிவித்த டிஸ்னி இந்தியா..!

இந்நிலையில் மலாலா இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் அஸர் மாலிக் என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “இது என் வாழ்வின் பொன்னான நாள். அசரும் நானும் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவை கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தையும் அனுப்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read  'Code Red' - பேராபத்தில் மனிதகுலம்..! எச்சரிக்கை மணி அடித்த IPCC…!

மலாலாவின் கணவர் அஸர் பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அஸர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாடகங்களை உருவாக்கும் டிராம்போலைன் என்று அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

Also Read  மருமகளை மறுமணம் செய்த மாமனார்… அதிர்ச்சியில் உறைந்த மகன்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஸர்.

மேலும், இருவரும் 2019ம் ஆண்டிலிருந்து ஒருவரையொருவர் அறிந்து உள்ளதாக தெரிகிறது. பர்மிங்காமில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடியபோது எடுக்கப்பட்ட செல்பியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அஸர்.

அதில் மலாலாவும் இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அஸர் மலாலாவை டேக் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடேங்கப்பா! – துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள இந்து கோயில்!

Tamil Mint

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

“கழுதைகளின் அரசன் இம்ரான்கான்” பாக். நாடாளுமன்றம் வரை எதிரொலித்த கழுதை வளர்ப்பு…!

sathya suganthi

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

Tamil Mint

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

பென்குயின்களை அழிக்கும் அரிய உயிரினம்! – வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

எதுவும் காதலே… அரச அந்தஸ்தை உதறி காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி..!

suma lekha