a

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரமா? – எங்கு தெரியுமா?


மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் நூர்ஜகான் எனப்படும் அரியவகை மாம்பழம் ஒன்றின் விலை ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை மாம்பழம் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ் மாவட்டம் கத்திவாடா பகுதியில் பிரத்யேகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழம் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Also Read  பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

வழக்கமாக ஜூன் மாதத்தில் விளையும் நூர்ஜகான் மாம்பழம் இந்த ஆண்டு அதிக அளவில் விளைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் 3 வகையான மா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 250 பழங்கள் விளைந்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு மாம்பழத்தின் எடை 2 முதல் 3.5 கிலோ வரை இருக்கும்.

Also Read  கொரோனா 2ம் அலை எதிரொலி - 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

இதுகுறித்து விவசாயி சிவராஜ் சிங் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாம்பழங்கள் அதிக அளவில் விளைந்துள்ளது. மாம்பழங்கலி வாங்க வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மற்றும் தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பருவ நிலை சிறப்பாக இருந்ததால் விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் விற்பனை குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

Also Read  வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

Devaraj

மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

Devaraj

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

சிங்கிளாக இருக்கும் மாணவிகளுக்கு பிப்ரவரி 14க்கு பிறகு அனுமதி இல்லை! – வைரலாகும் கல்லூரி நோட்டீஸ்!

Tamil Mint

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

Tamil Mint

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint