வடகொரியாவில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்..! அதிபரின் உத்தரவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்..!


வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் கொஞ்சமாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், உலக நாடுகள் பல இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வடகொரியாவில் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் மற்ற இயற்கை பேரழிவுகள், விவசாயத்துக்கான பொருட்களின் போதாமை, வறட்சி, பயிர்கள் சேதம், மிக மிகக் குறைந்த இயந்திரமயமாக்கம் ஆகியவற்றால் வடகொரியாவில் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா தனது வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது.

Also Read  காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு... தாலிபான்கள் கண்டனம்..!

அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருள் என மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடி உள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை சுமார் 45 டாலராக உள்ளது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 3, 300).

Also Read  28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! - அமெரிக்காவில் வினோதம்

இந்நிலையில், தான் அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன், நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டு மக்கள் கூறுகையில், “2025 வரை அரசு மக்களை குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? இப்போதே உணவு கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது.

தினமும் உணவு பற்றாக்குறையால் கடுமையாக தவித்து வருகிறோம். எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது என்றே தெரியவில்லை” என வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு அதிபர் கிம் ஜோங் உன், “மக்களுக்கான உணவு தற்போது பதற்ற நிலைக்கு சென்றுள்ளது. இந்த சூழ்நிலை டென்ஷனை அதிகரித்துள்ளது. வேளாண் துறை திட்டமிட்டபடி செயல்படவில்லை” என கூறியுள்ளார்.

Also Read  சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ...!

இருப்பினும் அதிபரின் இந்த தருவால் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. மேலும், அவரது இந்த உத்தரவிற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுட்டெரிக்கும் சூரியன் – கடும் வெப்பத்தால் 200 பேர் பலி!

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க முயன்ற இளம் கால்பந்து வீரர் மரணம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொண்டார் அமெரிக்க அதிபர்.!

suma lekha

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்

Devaraj

செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள்…! சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

sathya suganthi

டிரம்ப் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்: டிக்டாக்குக்கு கடைசி கெடு விதித்த அமெரிக்க அதிபர்

Tamil Mint

ஆப்கனில் அதிகரித்துவரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள்

Tamil Mint

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi